வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

பூபதி என்னையும் இந்தப் பதிவுத் தொடரில் இணைத்தமைக்கு நன்றி. ஏதோ என்னால் முடிந்ததை எழுதியிருக்கின்றேன்.

மணிமேகலா அவர்கள் அளவைகள் பற்றி எழுதியதையும் அதற்குரிய பதிலையும் பார்த்துவிட்டு அளவைகள் பற்றி ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். தேடலின் விளைவாக இந்தப் பதிவு. மணிமேகலா முகத்தல் என்பது பற்றி எனக்கு மேலதிக தகவல்களை திரட்ட முடியவில்லை. வேறு யாராவது முகத்தல் அளவைபற்றி தெரிந்தவற்றை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

நீட்டல் அளவை


காதம் - 10 மைல்
ஓசனை - 4 காதம்
கல் - 1 மைல் (1609 மீட்டர்)
முழம் - முழங்கை முதல் நடுவிரல் நுனி வரை
சாண் - கட்டை விரல் நுனி முதல் சிறு விரல் நுனி வரை
ஒட்டைசாண் - கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் உள்ள இடைவெளி
சாட்கோல் - சாண் அளவுள்ள கோல்
அங்குட்டம்- கட்டை விரல் நீளம்
அடி- 12 அங்குட்டம்
காசாகிரம் - மயிர் நுனியளவு
ஆள் - மனிதனுடைய உயரம்
சேன் - உயரம் / நீளம்

நிறத்தல் அளவை

ஆழாக்கு - 1/8 படி
செவிடு - 1/5 ஆழாக்கு
சேர் - 5 ஆழாக்கு
வீசை - 1400 கிராம்ஸ்
இடா- முகத்தல் அளவை
உழக்கு - 1/4 படி
சின்ன படி - 1/2 படி
பக்கா - 2 படி (தோரயமாக 2 லிட்டர்)
வட்டி- 1 படி
வல்லம் - 2 அல்லது 4 படி
எத்துனை - எள் அளவு
கஃசு - 1/4 பலம்
பலம் - தோரயமாக 35 கிராம்ஸ்
ராத்தல் - 13 பலம்
கோட்டை - 21 மரக்கால்
கலம் - 12 மரக்கால்
தூணி - 8 மரக்கால்
பறை - 6 மரக்கால்
கலரை - 1 1/2 மரக்கால்
குருணி (மரக்கால்) - 8 படி

பரப்பளவு

குண்டு - 1089 சதுர அடி
குழி - 144 சதுர அடி
மா - 100 குழி
வேலி - 20 மா (6.67 ஏக்கர்)கால அளவு


கற்பம் (கல்பம்) - பிரம்மாவின் ஒரு நாள் - 4,32,00,00,000 வருஷம்
பதுமகற்பம் - பிரம்மாவின் வாழ்க்கையின் முதல் பகுதி
உரி - அரை நாழி
கன்னல் (நாழிகை) - 24 நிமிடங்கள்
கணம் - நொடிபோழுது, கண் இமைக்கும் நேரம்
படலம் - செயல் நடக்கும் நேரம்
யாமம் - 3 மணி நேரம் - 7 1/2 நாழிகை
மண்டலம் - 40/41/45 நாள்கள்
மாமாங்கம் - 12 வருடங்கள்

இதெல்லாம் தேடலில் கிடைத்தவை.

எமது உறவுமுறைகள் பற்றி யோசித்தபோது சில உறவுமுறைகளில் நாம் பயன்படுத்திய சொற்கள் மாற்றமடைந்து அல்லது மருகிவிட்டமை தெரிகின்றது.

இவைகள் போன்று நட்புடன் ஐமால் கூறியதுபோல் அம்மா என்ற சொல்லும் மருகிவிடுமோ என்ற கேள்வியும் எழுந்தது.

உதாரணமாக பெற்றோரின் பெற்றோர்களை பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி என்றெல்லாம் முன்பு அழைத்தார்கள் ஆனால் இன்று அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா என மாற்றமடைந்துள்ளன.

இதேபோல் பெற்றோரின் உடன் பிறந்தவர்களையும் பெரியப்பு, சின்னப்பு என்ற அழைக்கப்பட்டவர்கள் பின்பு பெரியையா, சின்னையா என்றும் இன்று பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, சித்தி என்ற உறவுப்பெயரில் அழைக்கப்படுகின்றாhர்கள்.

தாத்தா பாட்டியுடன் வாழ்கின்ற கொடுப்பனவு இருக்கின்றவர்கள் அவர்களது பேச்சில் பயன்படுத்தப்படும் தூய தமிழ்ச் சொற்களை வியக்கத்தக்க அளவில் அறியமுடியும்.

தாத்தாவும் பாட்டியும் மட்டுமல்ல அம்மாவும் அப்பாவும்கூட என்னருகில் இல்லை. தனிநபர் வாழ்வில் அதிகமாக என்னால் எதையும் காணமுடியவில்லை. மன்னித்துவிடுங்கள்.

ஆனாலும் ஓர் நல்ல முயற்சியை எமது நட்பு வட்டத்துக்குள் ஆரம்பித்துவைத்த ராகவன் சாருக்கு மிக்க நன்றிகள்.

மிக குறைவான நேரமே வலைத்தளங்களில் என்னால் செலவிடமுடிகின்றது. அதனால் பூபதியின் வலைத்தளத்திற்கு வருகை தருவதும் அவருக்கு வரும் பின்னோட்டங்களை பார்வையிடுவதும் பின்னோட்டங்கள் இடுபவர்களது வலைத்தளங்களை நோட்டம் இடுவதுமே எனக்கும் வலைக்கும் இடையேயான தொடர்பு.

எமது நட்பு வட்டத்திற்குள் புதிதாக சிலரை தெரிவு செய்ய வேண்டும். இதோ இவர்களை தொடர் பதிவை இடும்படி அன்போடும் அவர்களது பதிவுகளை வாசிக்கத்துடிக்கும் ஆசையுடனும் கேட்டுக் கொள்கின்றேன்.

திகழ்மிளிர்: மிளிரும் எண்ணங்களின் சொந்தகாரர்


மணிமேகலா: ஆர்ப்பாட்டம் இல்லாத அறிவு

அறிவுமுகம்: முகம் காணத் தூண்டும் நேயம்

கமல்: நேர்மையான எழுத்தும் நியாயமான பார்வையும்

குறிப்பிட்ட நண்பர்கள் தமது பதிவில் இன்னும் புதிய நண்பர்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

5 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் பதிவிற்கு

  அருமையான தகவல்கள்

  பதிலளிநீக்கு
 2. தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி

  தமிழ் மறந்தே போகுமா ? ( வழக்கொழிந்த சொற்கள் ) என்னும் பதிவை ஏற்கனவே இட்டு விட்டேன்.

  இந்தத் தொடர் பதிவின் தொடர்பான இடுகையை அனைத்தையும் படித்துக் கொண்டு தான் வருகின்றேன். அனைத்தையும் இணைத்து விரைவில் ஒரு இடுகை எழுத உள்ளேன்.

  மீண்டும் ஒரு முறை நன்றி

  வாழ்த்துகள்

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 3. வாவ்! மிக அருமை: மிக மிக அருமை;நீங்கள் ஒரு அழகிய அறிமுகம் எங்களுக்கு.வலைப் பூக்களின் சார்பில் மனப் பூரிப்போடு உங்களை வரவேற்கிறோம்.

  உங்கள் இந்தப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது.இவை எல்லாம் இது வரை நான் அறியாதவை.எடுத்து வந்து தந்த கைகளுக்கு என் மலர் தூவிய வணக்கங்கள்.

  கூடவே நன்றிகள்,மிகைப் படுத்திய என்னைப் பற்றிய அறிமுகத்திற்கும் அழைப்புக்கும்.

  பதிலளிநீக்கு
 4. திகழ் மிளிர் உங்களது பதிவை பார்த்தேன் பலவிடயங்களை அலசியிருகின்றீர்கள். மீண்டும் தொகுத்து இன்னுமோர் பதிவை இடுவதற்கு மிகநன்றி. பதக்கம் என்பதும் தாலி என்பதும் இரு வேறுபட்ட ஆபரணங்கள் என்றே இதுவரை தெரியும்.

  திருமணத்தின்போது கணவன் கட்டுவது தாலி அம்மா தருவது பதக்கம்.
  இதுபற்றி யாராவது கருத்து சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
 5. நன்றாகவே எழுதியுள்ளீர்கள் ரசிகா. தொடர்ந்தும் எழுதுங்கள். அளவை பற்றிய சொற்கள் சிலவற்றைத்தவிர மிகுதி புதிதாகவே இருக்கின்றன. அதேபோல் உறவு முறையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய பதிவும் நல்ல முயற்சி. புதிய பதிவாளர்கள் மேலும் பல உறவு முறை மாற்றங்கள் பற்றி தெரியப் படுத்தினால் நன்றாக இருக்கும்.

  தொடருக்கு அழைத்துள்ள பதிவாளர்களின் தெரிவும் அழகு.

  பதிலளிநீக்கு